திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் ஜீவிதா தம்பதியினருக்கு துர்கா (மாற்றுத்திறனாளி) என்ற ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது. மேலும் மோகன் பச்சூர் டோல்கேட் பகுதியில் மெய்யரசு என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் குழந்தை பிறக்கா திடீர் என கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உள்ளதாக பெற்றோர்கள் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையின் உடம்பில் காயங்கள் இருப்பதால் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.