Connect with us

Raj News Tamil

சென்னை – இலங்கை இடையே இயக்கப்படும் விமானங்கள் ரத்து

உலகம்

சென்னை – இலங்கை இடையே இயக்கப்படும் விமானங்கள் ரத்து

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.10 மணி, மாலை 3.05 மணியளவில் வரவேண்டிய இரண்டு விமானங்கள் போதிய பயணிகளின் வருகை இல்லாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு அதிகாலை 3.10 மணி மற்றும் மாலை 4.10 மணியளவில் இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செல்ல வேண்டும். ஆனால் இந்த விமான சேவைகளும் போதிய பயணிகள் வருகை இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

மொத்தம் 4 விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top