வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ளது வைகை அணை. முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் வைகை அணையில் கடந்த 27-ம் தேதி 62.95 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர் நீர்வரத்தினால் 30-ம் தேதி 66 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் நேற்று மாலை 68.5 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

69 அடியை எட்டியதும் மூன்றாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படும். தற்போது விநாடிக்கு 3,134 கனஅடி நீர்வரத்தும், 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68.5 அடியை எட்டியது.

இதனால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் 70 அடியை எட்டியதும் 7 பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News