விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
மார்கழிப் பிறப்பையொட்டி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் காலை முதல் சென்றனர்.
தரிசனம் முடித்துவிட்டு மதியம் முதல் பக்தர் அடிவா பகுதியை நோக்கி இறங்க ஆரம்பித்தனர். தொடர்ந்து மதியம் முதல் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் சதுரகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சங்கிலி பாறை, ஊத்துப்பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து குறைவாக இருந்தபோது தீயணைப்பு தனியார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் இறங்கி வந்த நிலையில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பகுதியிலேயே தங்கவும் வைக்கப்பட்டுள்ளனர்.