ஆடி அமாவாசை தொடங்கியதில் இருந்தே பூக்கள் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல், கனகாமரம் பூ கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.300-க்கும், முல்லைப்பூ ரூ.150 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.450-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவாக உள்ளதால் இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.