கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பு பகுதியில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். நடந்து செல்பவர்களுக்கு வசதியாக சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையொட்டி பல கடைகள் உள்ளன.
ஒரு சில கடைகளில் உரிமையாளர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் நடைபாதையில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
நடைபாதையில் தங்களின் கடைகளுக்கு முன் பகுதியில் பிளாட்பார கடைகள் அமைத்து வாடகை வசூல் செய்யும் சம்பவங்களும் நடைபெறுகிறது. மேலும் நடைபாதையில் செல்லும் கல்லூரி பள்ளி மாணவிகளை கடைக்குள் இருந்து சிலர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காந்தி மைதானம் சந்திப்பு பகுதியில் வாலிபர் ஒருவரை அங்கு வரும் பூக்கடை வியாபாரி ஒருவர் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் அங்கு இருப்பவர்களிடம் ஏதோ வாக்குவாதம் செய்கிறார். அப்போது அந்த வழியாக வந்த பூக்கடை உரிமையாளர் திடீரென அவரை கன்னத்தில் பளார் என்று அடித்து விடுகிறார். அடித்த வேதத்தில் அந்த வாலிபர் நிலை தடுமாறி சுரண்டு விழுவது போன்று அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மைதானம் சந்திப்பு பகுதியில் வாலிபர் ஒருவரை அங்கு வரும் பூக்கடை வியாபாரி ஒருவர் தாக்கும் வீடியோ#Kanyakumari #TamilNews pic.twitter.com/kLdi9dHM8P
— Raj News Tamil (@rajnewstamil) January 21, 2023