சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்ட்டுள்ளது.
இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.