மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் இருந்த விவரங்கள் பின்வருமாறு:-
“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளுக்கு 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக மருத்துவ படிப்பிற்கு 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வட்டியில்லா 1.50 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி கவனிப்புக்காக 200 மையங்கள்.
ஜல் ஜீவன் இயக்கம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு.
2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு. அணுசக்தி மின்சார உற்பத்திக்கு தேவையான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படும். வளர்ந்த இந்தியாவை உருவாக்க அணு சக்தி இயக்கம் தொடங்கப்படும். அணுசக்தி மின்சார உற்பத்திக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 20 ஆ
மேன்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் 120 புதிய வழித்தடங்களில் விமான சேவை. பிராந்திய இணைப்புக்காக மேம்படுத்தப்பட்ட உதான் திட்டம் செயல்படுத்தப்படும்.
பீகாரில் ஏற்கனவே உள்ள விமான நிலையம் விரிவுப்படுத்தப்படுவதுடன் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்.
52 சுற்றுலா தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் மருத்துவ சுற்றுலா ஊக்குவிக்கப்படும். நாட்டில் புதிததாக 50 சுற்றுலாத் தலங்கள் உருவாக்கப்படும். சுற்றுலா தலங்களை எளிதாக அணுக நடவடிக்கை எடுக்கப்படும்.
அஞ்சல்துறை மிகப்பெரிய சரக்கு கையாளும் அமைப்பாக மாற்றப்படும். கிராமப்புறங்களில் சரக்கு கையாளும் முக்கிய நிலையமாக அஞ்சலகங்களை செயல்படுத்த திட்டம்.
வருமான வரியில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 4 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 4 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 8 லட்சம் வரை 5 சதவீதமும், 8 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும். மேலும், 12 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 16 லட்சம் ரூபாய் வரை, 15 சதவீதமும், 16 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும் வரி விதிக்கப்படும். மேலும், 20 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 24 லட்சம் ரூபாய் வரை 25 சதவீதமும் வரி விதிக்கப்படும்”