விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் டோல் பூத் ஊழியர் கால் டாக்ஸி ஓட்டுநரை தரை குறைவாக பேசியதால் 100-க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர் தங்களுடைய வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவர் சென்னை கிண்டி பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் விமான நிலையத்துக்குள் சென்ற ஓட்டுநர் நசீர் டோல் பூத் அருகே நுழைவு கட்டணம் வாங்கும் போது ஊழியர் அவரை தரகுறைவாக பேசியதாக கூறி ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கால் டாக்ஸி வாகனத்தை குறுக்கே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் ஓட்டுநர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.