கால் பந்து வீராங்கனை மரணம்..! மருத்துவர்கள் பணியிடை நீக்கம்..!

சென்னை வியாசார்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா ராணி மேரி கல்லூரியில் படித்து வந்தார். மாநில அளவிலான கால் பந்து வீராங்கனையான இவர், தவறான சிகிச்சை காரணமாக கடந்த ஆண்டு கால் அகற்றப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு உயர்தரமான சிகிச்சை பெற்று வந்த பிரியா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுனர், மேலும் துறை ரீதியாலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.