நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டது.
இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார். இதனை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் நிருபர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 40 தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.
இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் உடனிருந்தார்.