சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.
இந்தபடம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 10-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் “கங்குவா” படத்தின் முழு வெளிநாட்டு உரிமைகள் ரூ.40 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.