காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை!

கிருஷ்ணகிரி அருகே, தமிழக காட்டு பகுதிக்குள் நுழைந்த கர்நாடக காட்டு யானைகளை, விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, மரக்கட்டா உள்ளிட்ட பகுதிகளில், கர்நாடக மாநில காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

வழிதவறி வந்த இந்த காட்டு யானைகளை, ட்ரோன்கள் மூலமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் யானைகளை விரட்டவும், வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும், யானைகள் நடமாட்டம் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News