வேலூர் அருகே, பணி சுமையின் காரணமாக, தற்கொலைக்கு முயன்ற பெண் வனச்சரகர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வன வனச்சரகராக பணியாற்றி வருபவர் இந்து. இவரது கணவர் சந்தோஷ், கள்ளக்குறிச்சியில் பணியாற்றி வரும் நிலையில், விடுமுறை தினங்களில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, இந்துவை பார்க்க வந்துள்ளார். அப்போது, வீட்டில் விஷம் அருந்திய இந்து, மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பணிச்சுமையின் காரணமாக, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.