அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தார். இதனால் மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.