திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தவர் கு.க.செல்வம். இவர் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதையடுத்து 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த கு.க.செல்வம், 2022-ல் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.
அதன்பின்னர் தொடர்ந்து தி.மு.க.வில் பணியாற்றி வந்த கு.க.செல்வம், உடல் நலக்குறைவு காரணமாக, இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.