தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவரும், திமுகவின் முன்னாள் எம்.பி-யுமானவர் மஸ்தான். இவரும், இவரது உறவினர் இம்ரான் பாஷாவும், காரில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி, அவரை இம்ரான் பாஷா மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், மஸ்தானை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை அறிந்த மஸ்தானின் மகன், தனது தந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மஸ்தானின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். அதில், இம்ரான் பாஷா தான் கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, இம்ரான் பாஷா மஸ்தானிடம் இருந்து தொடர்ந்து கடன் பெற்று வந்துள்ளார்.
இந்த கடன் தொகை, ரூபாய் 15 லட்சத்தை நெருங்கியதும், இம்ரான் பாஷாவிடம் இருந்து பணத்தை திரும்பி கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க முடியாததால், தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து, மஸ்தானை கொலை செய்துள்ளார். இதையடுத்து, இம்ரான் பாஷாவையும், கூட்டாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.