மனைவியை விட இதுதான் என்னுடன் நெருக்கமாக உள்ளது – அதிர வைத்த பொன்.மாணிக்கவேல்

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் அமைந்துள்ள தாயுமானவர் ஆலயத்தில், உலக சிவனடியார்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முன்னாள் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏராளமான சாமி சிலைகள், விக்கிரகங்கள், கடத்தப்பட்டுள்ளது. இது எனது மனதையும் சிவனடியார்கள் மனதையும் ஈட்டி வைத்து குத்துவது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிலைகளை மீட்டு உரிய இடங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகளிடம் இருந்து, எனக்கு அச்சுறுத்தல் வருகிறது என்று குறிப்பிட்ட பொன்.மாணிக்கவேல், என் மனைவியை காட்டிலும் துப்பாக்கி தான் என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News