ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சிபு சோரன் (79). இவர் தற்போது ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
சிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்துள்ளார். கடந்த 2008 முதல் 2009 வரையிலும் பின்னர் 2009-2010 காலகட்டத்திலும் முதல்வராக பதவி வகித்து உள்ளார். மேலும் இவர் மத்திய நிலக்கரித்துறை மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.