கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) காலமானார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.
இவர் கர்நாடக மாநில முதல்வராக 1999 முதல் 2004 வரை செயல்பட்டார். பின்னர் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.