மன்னார்குடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன் காலமானார்..!

மன்னார்குடி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு. சீனிவாசன் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.

இவர் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது அமுமுக மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.