பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி காங்கிரசில் இணைந்தார்..!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “கனத்த இதயத்துடன், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கடசாமி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

RELATED ARTICLES

Recent News