பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் (79) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

பர்வேஸ் முஷாரப் 1943ல் டெல்லியில் பிறந்தார். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது.

1949 இல் அவர் தனது குடும்பத்துடன் துருக்கியில் சில காலம் வசித்து வந்தார், அதே நேரத்தில் அவர் துருக்கிய மொழியைப் பேசவும் கற்றுக்கொண்டார்.

1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து பிறகு தலைமை தளபதியானார். 1980 களில் ஒரு பீரங்கி படைப்பிரிவை அவர் வழிநடத்தினார்.

1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார்.

மார்ச் 2016 இல் சிகிச்சைக்காக துபாய் சென்றார். கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி அமிலாய்டோசிஸ் என்ற பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் முஷாரப் இன்று காலமானார்.

RELATED ARTICLES

Recent News