பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமராக இருந்தபோது பதவியை தவறாகப் பயன்படுத்தி ரூ. 14 கோடி ஊழல் செய்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ. 1 லட்சத்தை கட்டத்தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இம்ரான் கானின் எம்.பி. பதவியும் பறிக்கப்படுகிறது. இதனால் அவரால் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News