அப்துல்கலாமின் 91வது பிறந்தாள்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 91வது பிறந்தாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம ராமேஸ்வரம் அருகே பேய்கரும்பில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில், அப்துல் கலாமின் 91 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்காக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்டோ அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல்கலாமின் பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

சென்னை புழலில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா விமா¤சையாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், அங்கு வைக்கப்பட்டிருந்த கலாமின் புகைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலாதூவ மாயாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அப்துல்கலாமின் பிறந்தநாளை ஒட்டி புழல் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், சமூக ஆவலர்கள் பொதுமக்கள் என திரளானோ பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை ஒட்டி 15 ஆயிரத்து 91 மரக்கன்றுகள் நடப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, கலாம் யுவி அறக்கட்டளை சார்பில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாளையட்டி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உலக சாதனை முயற்சியாக 15 ஆயிரத்து 91 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதனொருபகுதியாக, குநத்தஅள்ளி அரசுப்பள்ளியில நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில், மதுரையைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தேசபிதா காந்தியைப்போன்று வேடமணிந்து கலந்து கொண்டார்.
ஒரே நேரத்தில் 15 ஆயிரத்து 91 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை அங்கீகா¤க்கும் விதமாக‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்டு’ அமைப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் அப்துல்கலாமின் 91வது பிறந்தநாள் விழா விமா¤சையாக கொண்டாடப்பட்டது. அப்போது, 910 மாணவர்கள் அப்துல்கலாம் போன்று முகமூடி அணிந்து, அவரது புகைப்படத்திற்கு மா¤யாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.