முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 -ஆம் ஆண்டு திருபெரும்புதூர் பொதுக்கூட்டம் குண்டு வெடுப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாள், நளினி,முருகன், சந்தன் உட்பட 7- பேர் கைது செய்யப்பட்டனர்.
1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் இவர்களுக்கு தூக்கு தண்டை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு தூக்கு தண்டணை, ஆயுள் தண்டணையாக குறைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை பல்வேறு கட்சிகள் வரவேற்ற நிலையில், தற்போது மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6-பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம், நன்னடத்தை, இவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் விடுதலை செய்யப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.