அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமானவர் ஜெயலலிதா. இவரது 77-வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, அதிமுகவின் தற்போதைய பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் எம்.பிக்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர். ஆனால், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கக் கூடிய செங்கோட்டையன், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இதனால், அதிமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.