லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், ஜூன் 4-ம் தேதி வரை ஒரு உதவி ஆணையர் தலைமையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
முதல் லேயரில் துணை ராணுவத்தினர், அடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் மூன்றாவதாக, ஆயுதப்படை போலீசார், நான்காவதாக சட்டம் ஒழுங்கு போலீசார் ஒரு உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரியில் 188 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒரு மினி கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதே போல வடசென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி 172 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தென் சென்னை வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் இரண்டு நிலைய அலுவலர்கள் தலைமையில் 15 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுவர். இரண்டு தீயணைப்பு வண்டிகள், 10 தீ அணைப்பான் (fire extinguisher) கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.