இலவச பேருந்து சேவையால் பெண்களுக்கு மாதந்தோரும் ரூ.888 சேமிப்பு..!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து சார்பில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் பயன்கள் குறித்து மாநில திட்டக்குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில், 50 % மேற்பட்டோர் 40வயதை கடந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் மாதந்தோரும் சராசரியாக ரூ.888 சேமிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவை எனக் கூறினார்.