முருகனின் அறுபடைவீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றலா..!

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கான இலவச ஆன்மிக சுற்றுலாவை இந்து சமய அறநிலையத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்பும், 60 முதல் 70 வயதுடைய தகுதியான பக்தர்கள் இன்று முதல் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இலவச சுற்றுலாவில் 200 பக்தர்கள் வீதம் 5 கட்டமாக ஆண்டிற்கு 1,000 பக்தர்களை அழைத்து செல்ல உள்ளனர். விடுபட்டவர்கள் முறையே அடுத்தடுத்த சுற்றுலாவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன்படி, வரும் 28 ஆம் தேதி முதல் இலவச ஆன்மிக சுற்றலா தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News