பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லுசிடி. 30 வயதான இவர் உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை நெருங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.
அந்த பெண் உதவி செய்யாமல் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டார். அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.