காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் (29). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் யார் பெரியவன் என்ற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் கிரிதரனை கொலை செய்து கயிற்றால் கட்டி அருகிலுள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கிவிட்டு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து கிரிதரனின் அக்கா கிரிஜா கடந்த பிப்ரவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் கிரிதரனுடன் மது அருந்திய நண்பர்கள் சிலர் கஞ்சா மற்றும் குடிபோதையில் கிரிதரனை கொலை செய்தது தெரிய வந்தது. கிரிதரனின் நண்பர்களான தாமோதரன் (19), ஆகாஷ் (18), கார்த்தி (18), ஹரிஷ் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.