மீண்டும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து! செம அப்டேட்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதுவரை பிக்-பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத சிலர் கூட, ஜி.பி.முத்து அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்று தெரிந்ததும், பார்க்க ஆரம்பித்தனர்.

அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த இவர், தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதும், பாதியிலேயே, பிக்-பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், இவரிடம் ரசிகர்கள் சிலர், “வைல்ட் கார்ட் என்ட்ரியின் மூலம், மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்களா” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், “இதுவரை என்னை அவர்கள் கூப்பிடவில்லை. இனிமேல் கூப்பிட்டால், பார்க்கலாம்” என்று பதில் அளித்துள்ளார். இதனால், அவர் பிக்-பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக, ரசிகர்கள் கூறி வருகின்றனர்.