ஜி.பி.முத்து கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப்போன கமல்ஹாசன்!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில், அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்-பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியாளராக டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்து அறிமுகப்படுத்தப்பட்டார். வீட்டின் உள்ளே ஜி.பி.முத்து சென்ற பிறகு, கமல் அவரிடம் எப்படி உணர்வதாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஜி.பி.முத்து, இங்கு யாரும் இல்லை.. நான் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். அதற்கு, ஆதாம் ஏவாள் கதையை சுட்டிகாட்டி பேசிய கமல், ஆதாம் தான் முதலில் வந்தார். அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று பேசினார். இதற்கு, “ஆதாமா.. யார்?” என்பதைப் போல ஜி.பி.முத்து பேசினார்.

ஆதாம் யார் என்பது தெரியாமல் ஜி.பி.முத்து கேட்டு, கமல் ஹாசனை அதிர்ச்சி அடைய வைத்தது. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கமல் சாதாரணமாக பேசினாலே யாருக்கும் புரியாது. இவ்வாறு பேசியிருப்பது, ஜி.பி.முத்துவிற்கு புரியாமல் இருந்தது சாதாரணம் தான் என்றும் சில நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.