அய்யோ பாவம்…! ஜி.பி முத்துவை கதற விடும் போட்டியாளர்கள்..!

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஞாயிறு அன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்டுள்ள லூசுப்பயலே,கிறுக்குப்பயலே புகழ் உடன்குடி ஜி.பி முத்து முழுநேர பொழுது போக்காளராக மாறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சக போட்டியாளர்கள்,அவரை எந்த அளவிற்கு வச்சி செய்ய முடியுமோ,அந்த அளவிற்கு வம்பு இழுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஜி.பி முத்துவை, மற்றொரு போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் குனிந்து கொண்டே சென்று பயமுறுத்துகிறார்.

பதறிப்போன ஜி.பி முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார்.இதைப்பார்த்த அனைவரும் சிரிக்கின்றனர்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நிலையில், பல்வேறு தரப்பினர் வெகுளியான ஒருவரை இப்படி செய்யலாமா என கொந்தளித்து வருகின்றனர்.