இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர், அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை, பிறருக்கு செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் செய்த உதவி ஒன்று, சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது. அதாவது, சிறுவன் ஒருவனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த கட்டியை நீக்குவதற்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், தனக்கு உதவி செய்யுமாறு அந்த சிறுவன் ஜி.வி.பிரகாஷிடம், இணையத்தில் உதவி கேட்டுள்ளார்.
இதனால், அந்த சிறுவனின் வங்கி கணக்கிற்கு, ரூபாய் 75 ஆயிரம் பணத்தை, அவர் அனுப்பியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்திலும், அவர் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், ஜி.வி.பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.