செல்வராகவனின் அடுத்த ஹீரோ இவரா?

ஜீனியஸ் இயக்குநர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள், இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.

ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் இயக்கி வரும் திரைப்படங்கள், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால், இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் உள்ளது.

அப்படியே சில வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு, சில நாட்களிலேயே நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், செல்வராகவனின் அடுத்த படத்தில் நடிகர் ஜி.வி.பிகாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, இருவரும் பணியாற்ற உள்ளோம் என்று கூறியிருந்தார்.

இவரது பதிவை பார்த்த ரசிகர்கள், செல்வராகவனின் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று நினைத்திருந்தனர். ஆனால், தற்போது வந்துள்ள தகவலை வைத்து பார்க்கும்போது, செல்வராகவனின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்க போகிறாராம்.

RELATED ARTICLES

Recent News