Connect with us

Raj News Tamil

ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கம்!

இந்தியா

ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கம்!

ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

More in இந்தியா

To Top