Connect with us

Raj News Tamil

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, டெல்லி உள்ள பாரத மண்டப வளாகத்தில் இன்று, நாளையும் (செப். 9,10) நடைபெறவுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு பாரத மண்டப வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கவுள்ளார். இந்த விருந்தில் முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (சனிக்கிழமை) காலை விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

குடியரசுத் தலைவர் அளிக்கும் இந்த விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பிகார் முதல்வா் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top