ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி – டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதற்கான முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஏவப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளில் ககன்யான் விண்கலம் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.