Connect with us

Raj News Tamil

கேம் சேஞ்சர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? உறுதியாக சொன்ன தயாரிப்பாளர்!

சினிமா

கேம் சேஞ்சர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? உறுதியாக சொன்ன தயாரிப்பாளர்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷீட்டிங்கை தொடங்கினார். ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், அப்படத்தின் ஷீட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்த படத்தின் ஷீட்டிங் தொடங்கி பாதி முடிந்தபோது, கமலுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்து, இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் ஷங்கர் நடத்தி வந்தார். இதில், இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது, அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இதுகுறித்து பேசியுள்ளார். அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top