அஜித்துக்கு போட்டியாக வந்த பிரபல இயக்குநரின் திரைப்படம்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

வரும் பொங்கல் பண்டிகை அன்று, இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஸ்லோவாக வந்து, வசூல் மொத்தத்தை அள்ளிவிடலாம் என்று படக்குழுவினர் திட்டம் தீட்டியிருந்தனர்.

ஆனால், அந்த திட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில், புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, ஷங்கரின் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது.

ஆனால், பணிகள் முடியாத காரணத்தால், பொங்கல் பண்டிகை அன்று, அப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். இந்த திரைப்படமும், குட் பேட் அக்லியும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆவதால், வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News