ராம்சரன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதியுள்ளார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பு பணி நடந்து வந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவலை தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார். அதாவது, செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவரிடம், கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “இயக்குநர் ஷங்கர் தனக்கு திருப்தி ஏற்படும் வரை, சமரசம் செய்துக் கொள்ளவே மாட்டார். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள இயக்குநர். இந்த படத்திற்காக, கடுமையாக உழைத்து வருகிறார்.
இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. ரிலீஸ் பற்றி இப்போது வரை முடிவு செய்யப்படவில்லை.
படம் முடிந்த பிறகே, அதுகுறித்து யோசிப்போம்” என்று கூறியுள்ளார். இதன்மூலம், இப்படத்தின் ரிலீஸ் இப்போதைக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.