ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமை மட்டும்தானாம். ஹிந்தி உரிமையையும் சேர்த்தால் அது 150 கோடியைத் தொடும் என்கிறார்கள்.