நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி. எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது.
இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். அதன்படி சென்னையில் பல்வேறு விதமான விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர், அந்த வகையில் சென்னை கொளத்தூரில் 1501 லட்டுகளை வைத்து விநாயகர் சிலையை உருவாக்கப்பட்டுள்ளது, இதனை பொதுமக்கள் தீபாரதனை காட்டி வழிபட்டு வருகின்றனர்.