அரண்மனை 2, மத கஜ ராஜா என்று இரண்டு பிரம்மாண்ட வெற்றிப் படங்களை, இயக்குநர் சுந்தர் சி கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, இவர் நடிப்பில் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில், நடிகர் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர் சி-யும், வடிவேலுவும் இணைந்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது, மிகப்பெரிய அளவில் உள்ளது.