வடிவேலு நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில், கேத்ரின் தெரசா, வானி போஜன் என்று பல்வேறு தரப்பினர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து, புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தில், 5 வித்தியாசமான கெட்டப்களில், வடிவேலு நடித்து வருகிறாராம்.
இந்த 5 கெட்டப்களில் ஒன்றாக, பெண் வேடத்தில் அவர் நடித்து வருகிறாராம். இதற்கு முன்னர், வடிவேலு பெண் வேடத்தில் நடித்த அனைத்து காமெடி காட்சிகளும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.