பிரான்ஸ் தலைவர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்களைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா நிறைவடைந்தது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூடுதல் எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து கங்குலி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு மல்யுத்த விளையாட்டு விதிகள் அதிகம் தெரியாது. ஆனால் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, அவர் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இறுதிப் போட்டிக்குச் செல்லும்போது, தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் நிச்சயம் கிடைத்திருக்கும். தவறாக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்துக்காவது வினேஷ் போகத் தகுதியானவர் என்று கருதுகிறேன்” என்றார்.