தொழிலதிபராக மாறும் கங்குலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது தொழிலதிபராக மாறவுள்ளார்.

ஸ்பெயின் தலைநகா் மேட்ரிட் நகரில் நடைபெற்ற மேற்கு வங்க சா்வதேச வா்த்தக மாநாட்டில் (பிஜிபிஎஸ்) உரையாற்றிய கங்குலி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் மூன்றாவது இரும்பு ஆலையை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். அதற்காக மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விளையாட்டில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளேன் என நம்மில் பலா் நினைத்திருப்பீா்கள். ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே சிறிய இரும்பு ஆலையை நாங்கள் தொடங்கிவிட்டோம். தற்போது, மேதினிபூரில் புதிய இரும்பு ஆலை ஒன்றை கட்டத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் புதிய ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கபட்டு, அடுத்த ஓராண்டில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இந்த ஆலையைத் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைப் பணிகள் அனைத்தும் 4 முதல் 5 மாதங்களில் நிறைவடைந்துவிட்டன. மாநில முதல்வா் உடனிருப்பதால் இதனைக் கூறவில்லை. சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தொழில் தொடங்க விரும்புவா்களை மேற்கு வங்கம் எப்போதும் வரவேற்கத் தயாராக உள்ளது. அதன் காரணமாகத்தான் மாநில முதல்வா் ஸ்பெயின் வந்திருக்கிறார். அந்த வகையில், மாநிலம் மற்றும் அதன் இளைஞா்களின் வளா்ச்சிக்கு மாநில அரசு பணியாற்ற விரும்புகிறது என்பது தெளிவாகிறது என்று சௌரவ் கங்குலி கூறினார்.

RELATED ARTICLES

Recent News