இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா விளைவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறை அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான புதிய சட்ட திட்டத்தை
அந்நாட்டு சித்தா மற்றும் ஆயுர்வதே மருத்துவ அமைச்சர் சிசிரஜெயக்கொடி சமர்ப்பித்தார். அப்போது, பேசிய அவர், ஆயுர்வேத மருத்துவ சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விளைவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
கஞ்சா பணப்பயிராக விளைவிக்கப்படுவதன் மூலம், அதில் உள்ள மருத்துவ குணங்களும் அங்கீகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அங்கீகரிக்க தவறினால், பாரம்பரிய மருத்துவத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை இத்தகைய மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.